இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3————————||||
உப்புமண்டித் தெரு
இது ‘அட்வான்ஸ் ஐஸ்’ என்பதும்
உண்மையில் நான்
மூக்கு மூளியான அதை
‘முழுசா ரெண்டு ரூபா’ கொடுத்து
வாங்கியது அவருக்குப்
பிடிக்கவில்லை என்பதும் எனக்குத் தெரியும்...!
அந்த அது-
அவரைப் பொறுத்தவரை
ஒரு மூளிப் பொம்மை!
எனக்கோ
ஒரு போதி நிழல்!
தேஜ வனம்!
அதன் மெளன உதடுகளில்
ஒரு மானுட மோட்சகோஷம்!
தம்மம் சரணம் கச்சாமி!
சங்கம் சரணம் கச்சாமி!
புத்தம் சரணம் கச்சாமி!
மறு நாளிலிருந்தே
அந்த மஹா மூர்த்தி
எங்கள் பூசைமாடத்தருகே
மங்கலமான, சாந்தி மயமான
பூர்ணச் சந்திரப் புன்னகை யோடு
கொலுவேறி விட்டார்!