இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வ.கோ. சண்முகம்
||||————————6
தாயின் மடிக்குள்
தலை புதைத்துக் கொண்டு விட்டான்!
காலச் சக்கரம்
கடும் வேகத்தோடு
உருண்டு
உருண்டு
இப்போது
வெகுதூரம் போய்விட்டது!
உலக வீட்டில்
ஒருமூலை...!
அங்கே சில
அரக்கச் சிசுக்கள்!
அந்தச் சிசுக்களுக்கு
எழுபது
எண்பது
வயதுகளிலும்
ஏறிய சிம்மாசனத்தை விட்டு
இறங்காத
அதிகார அம்மா அப்பாக்கள்!
அவர்களின்
எதிரேயே
அரக்கச் சிசுக்களும்
பழைமையைப் பொசுக்கும்