இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7————————
உப்புமண்டித் தெரு
பண்டிகை விழா!
விழா நிரலின்
முதல் நிகழ்ச்சி
மூளி மானுடத்தின்
மூர்க்கத்தையே
தனது
"சாந்தி மயமான
பூர்ணச் சந்திர
புன்னகைப்
பிரபையால்
போக்க வந்தப்
பொன் வெங்கல
மஹா மூர்த்தங்கள்;
மஹா செளந்தர்யக்
கலா ரூபங்களையே
காலடியில் போட்டுடைத்துக்
காசு பெறாத
தூசியாக்குவது தான்!”
அந்தத் தூசியின்
ராட்சச நெடியைத்
தாங்கிக் கொள்ளத்
திராணியற்று
உலக வீடு
மெளனமாகக்
குமுறும் போது...