இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வ.கோ. சண்முகம்
———————— 8
என் வீட்டுப் படிப்பறையின்
ஏழைச் சுவரில்
ஒரு ஓவியம்...!
அதிலே
"அதே அதே
சாந்திமயமானப்
பூர்ணச் சந்திரப்
புன்னகை” !
நான் புளகித்தேன்!
புளகித்துக் கொண்டே
இருக்கின்றேன்!
அன்று
உடைத்த
விரல்களே
இன்று
படைத்து
விட்ட
மஹா ஒவியம்!