இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வ. கோ. சண்முகம்
||||————————18
செயல் மறவர்
திகைத்துப் போய் விட்டார்!
சில நிமிடங்களுக்குப் பிறகு
தேர்தல் பிரச்சார
நோட்டீஸ் கட்டுகளோடு
எங்கோ
புறப்பட்டு போய் விட்டார்!
எவர்சில்வர் தட்டில்
'சொரை'க்காய்க் குழம்பு
ஊற்றிப் பிசையப்பட்ட
சோறு காய்ந்து
பருக்கையாகிக் கொண்டிருந்தது!
தட்டிலிருந்த அப்பளங்களையும்
வருகல்களையும்
வீட்டிலே வளர்ந்த
செல்லப் பூனைகள்
ருசி பார்த்துக் கொண்டிருந்தன!