இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தொடர்வண்டிச்
சந்திப்புக்குள்
வந்து நின்ற
வண்டியின்
முதல் வகுப்புப்
பெட்டியிலிருந்து
தனிச்செயலர் இறங்கி
வெப்பப்பாத்திரம் சூழ
உணவறைக்கு ஓடினார்...
பத்து நிமிடத்தில்
காப்பியோடு
திரும்பிய
தனிச்செயலரின் முகம்
சினத்தால்
கொதிப்பேறி இருந்தது...!