இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
21 ————————||||
உப்புமண்டி தெரு
அதற்குள் -
அவரை
அடையாளம் கண்டு கொண்ட
தொடர்வண்டி சந்திப்பு வாசிகளுக்கு
ஒரே குதுகலம்!
"வருக! வாழ்க!”
இவைகளோடு
விசில்கள்...!!
கசமுசாக்கள்...!!
பாப் ஸ்டார்ன்னா சும்மாவா?
தொடர்வண்டி சந்திப்பை ஒட்டி
ஒரு
புது
பொதுக் கழிப்பிடம்!
கட்டடம் புதுசு
என்றாலும்
‘பாணி' பழசு!
முகப்புச் சுவரில்
'ஆண் - பெண்'
கைச் சித்திரங்கள்...!
புராணிகமான
புராதன முறை!