இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஓ! அமெரிக்கா!
வீட்டுக்குள்
விருந்து
தயாராகிக் கொண்டிருந்தது...
தோட்டத்தில்
வேலி அடைப்பு வேலை
பாதி முடிந்த நிலை...
பணியாட்கள்
எட்டி இருந்த
இன்னொரு
பழைய வீட்டுத் திண்ணைக்குப் போய்
சாய்ந்து
புரண்டு கொண்டிருந்தனர்.
நகராண்மைக் கழகச்
சங்கு