இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
31 ————————||||
உப்புமண்டித் தெரு
கரங்கள் நடுங்கின!
வாய் குழறியது!
"எசமான்...
பெரிய மனசு பண்ணி
மன்னிச்சிடுங்க...!
வேணுமின்னா
கொண்டாந்து விட்டேன்?
என்னையும்
ஏமாத்திப்புட்டு
அந்த பீடை
இங்கே வந்து புடுச்சிங்க...!
இதுக்காக
எசமான்
தருமதுரை நீங்க
என்னா அவதாரம் போட்டாலும்
என் உசிறேக் கொடுத்தாலும்
கட்டிப்புடறேங்க...!"
எசமானர் இடை மறித்தார்
"போதுண்டா வசனம்...!
புத்தி கெட்ட பயலே!
எதிலேயுமே
ஜாக்கிரதை வேணும்டா...!
மேய்க்கிற பயலுக்கு