இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கட்டு!
ஒரு குக்கிராமத்திருந்து
நாட்டுமாட்டு வண்டி ஒன்று
நகரத்தை நோக்கி
ஆமையாக
ஊர்ந்து கொண்டிருந்தது...!
அந்தச் சாலை
ரொம்பவும் மோசமானது!
மேடுபள்ளங்கள் நிறைந்தது
அந்த வண்டியில்
நாலைந்து பேர்களுக்கு
நடுவில்
தன்னையே மறைத்துக்
கொண்டிருப்பவர் போல -
ஒரு மாதிரியான
கலவரத்துடன்