இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
37————
உப்புமண்டி தெரு
அந்த வைக்கோல் வண்டிக்காரன்
கூண்டு வண்டியோட்டிக்குத்
தோழன்போலிருக்கிறது.
கிண்டலாக
“என்னா அண்னே!
ஓம் பிளசரு
ஊர்வலக்காரு மாதிரியில்லே
ஊருது!
சரிசரிநான் போறேன்,
நாளைக்குக் காலம்பற
'நாஸ்த்தாவுக்காவுது
டவுனுக்கு
வந்து சேரு'?
அடுத்த சில நிமிடங்களில்
கூண்டு வண்டியின்
இடது புறத்தில் மாறி, முந்தி
வைக்கோல் வண்டி கூட
வேகமாகப்
போய் விட்டது!
ஒரு மாதிரிக்குத்
தாங்க முடியாத
ஆத்திரம் அவமானம்,