இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
39———
உப்புமண்டித் தெரு
நாலுகால் பாய்ச்சலில்
ஒடின!
தலை தெறிக்க ஒடின!
பள்ளம் படுகுழிகளில்
விழுந்து எழுந்து
எழுந்து விழுந்து
லொட லொடத்த
வண்டி ஒடத்துவங்கிற்று !
வழியில்
ஒரு மதகுப் பாலம்!
அந்தப் பால மேட்டில்
வண்டி
வேகமாக ஏறிஇறங்கும் போது -
வண்டியின் வலது சக்கர
இரும்புக் கட்டு மட்டும்
தனியே கழன்று
ரோசத்தோடு
வண்டியின் முன்னேயே
ஒடி
ஒரு குட்டி விளையாட்டை
நடத்தி விட்டு
பக்கத்தில் இருந்த
வாய்க்காலின்
வயிற்றுக்குள்
சரணடைந்து விட்டது!