இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
41————
உப்புமண்டித் தெரு
பட்டறைக்குப்
போய் சேர்ந்தது,
புது உருப்பெற!
மருத்துவ மனையில்
தலையில்
பலத்த கட்டுடன்
பாதி நினைவில்
படுத்துக் கிடந்த
அந்த ஒரு மாதிரி யின்
செவிகளில்
அரைகுறையாக
ஒரு செய்தி
நுழைந்தது!
அது
இது:
இந்த ஆளு
நம்ம கட்சியை உடைக்க
ட்ரை பண்ணியிருக்காரு!
ரயில்லேயும்
மாட்டு வண்டியிலேயும்
ரகசியமாக
நாலைந்து ஊர்களுக்குப்
போய்
யாரு யாரையோ
கரைச்சி கலக்கியிருக்காரு