இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உப்புமண்டித் தெரு
. நகராண்மை தருமத்தின்
அழுமூஞ்சி விளக்குகள்
விழித்துக் கொண்டு விட்டன.
திருவம்பலம் பிள்ளை
தன் சிந்தனைகளை
கசக்கிய படி
நடந்தார்.
உப்புமண்டித் தெரு
ஊரின் கடைசியில்
ஒதுங்கிக் கிடந்தது.
ரவிக்கைத் தோரணங்கள்
அசைந்து அசைந்து
சைகையால் அழைக்கும்
அந்த