இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வ.கோ. சண்முகம்
———44
ராத்திரி தேசத்துக்கு
எவரும் நேர்வழியில்
போவதில்லை.
சாக்குக்கடை சந்துவழி
நுழைந்தால்
ஒரு ஒத்தையடிப் பாதை
கால் பிடித்து
அழைத்துக் கொண்டுபோய்
உப்புமணிடித் தெருவில்
விட்டுவிடும்.
வெளியுலக பரிணாம
வர்ண ரூபங்கள்
உப்புமண்டித் தெருவிலும்
பதிந்துதான இருந்தன!
சட்ட - சமூக
மிரட்டல்களால்
உப்புமண்டித் தெருவின்
உடல் வர்த்தகம்
மெலிந்து விடவில்லை என்பதை
பிள்ளை புரிந்து கொண்டார்!
அதனால் -
அவருடைய
நரைத்த நினைவுகளில் கூட
ஒரு சங்கோஜ உறுத்தல்!