இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
45———
உப்புமண்டித் தெரு
இருபது வருடங்களுக்கு
முன்பான இளமையை
இப்போது
மறுஒளிப்பதிவு செய்தன
அவருடைய நினைவுகள்
.
சில்க் பாஜி
கோல்ட்ஃளாக் சிகரெட்
அருணகிரியார் நாதராக
இதே
உப்புமணிடித் தெருவின்
உல்லாசப் பூக்களிடம்
அவர் விளையாடி
சொகபோக விளையாட்டுகள்
கொஞ்சமா நஞ்சமா ?
வெள்ளமிட்டுப் பொங்கிய
அந்த நினைவுகள்
இப்போது உறுத்த
வலிய அவற்றை விலக்க
எத்தனித்தவராக கையிலிருந்த
மீன்மார்க் மொத்திக் சுருட்டின்
மீதியை
முழு இழுப்பாக
இழுத்து விட்டு
காலடியில் போட்டு
மிதித்தார்.