இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வ.கோ. சண்முகம்
————48
உப்புமண்டித் தெருவின்
உல்லாச விடுகளில்
மகன்
உறைந்து கிடக்கும்
நிலையை நினைக்கையில்
தனது
இளம்பிராயத்தின்
பாலியல் நாடகங்கள்
நினைவுக்கு வந்ததை
தவிர்க்க முடியவில்லை
பிள்ளைக்கு!
அவரை
வளைத்துப் போட்டு
வசியமாக்கி
தனது எச்சில் உதடுகளுக்குள்ளேயே
சிறை வைத்திருந்தவள்
கருப்பழகி கனகா!
மாங்கனி நிகர்த்த
மார்பகங்கள்!
தூரிகை வளைவுபோல்
துலங்கும் இடைகள்!
தூண்டில் போடும்
மீண்களைப் போல்
துள்ளும் கண்கள்!