இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
49 ————————||||
உப்புமண்டித் தெரு
பேச்சும் சிரிப்பும்
ஒசைக் காமம்!
அவள் கைகளால்
ஒருமுறை தழுவப்பட்டவர்கள்
அவளிடம்
ஆயுள் தணர்டனை
அனுபவிக்கவே
ஆவல் கொள்ளுவர்!
அப்போது அவளுக்கு
முப்பது வயசு!
திருவம்பலம் பிள்ளையை
விட
மூன்று வயசு மூப்பு
கருப்புத் தங்கம்
கனகாவிடமிருந்து
திருவம்பலம் பிள்ளையை
பிரிக்க
அவர் தந்தை பட்ட
பாடுகள் கொஞ்சமா ?
"டிங் டிங்...”
எதிரே வந்த
பாம்பே மிட்டாய் வண்டி