இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வ. கோ. சண்முகம்
||||————————50
பிள்ளையின்
சிந்தனைகளைச்
சீய்த்தது.
உப்புமண்டித் தெருவின்
ஒற்றை சாரி முடிந்து
வேப்பமரத்து விடும்
வந்துவிட்டது...
அந்த வீட்டில்தான்
கதிரவன்
அஸ்தமனமாகிக்
கிடக்கிறான் என்று
காற்று வாக்கில்
தகவல் கசிந்தது!
மகனை
வளைத்துப் போட்டிருக்கும்
கைகாரியிடம்
சத்தம் போட்டு மிரட்டி
எப்படியாவது அவனை
வெட்டி விட்டுவிட வேண்டும்
என்று தீர்மானித்தபடி
உணர்வுகளை
உஷ்ணப்படுத்திக் கொண்டு
கதவைத் தட்டினார்.