இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வ. கோ. சண்முகம்
||||————————58
வெண்கலத் தொனியில்
'நான்ஸென்ஸ்!'
என்ற
ஒரே ஒரு சொல்லைத்
தனது
விளக்கப் பேருரையாக
விடையாக
வீசி எறிந்தார்!
கூட்டம் பரபரத்தது!
கூச்சல் சலசலத்தது!
'விதண்டா வாதத்
தலைவர் பெருமான்'
இப்போது
வீரா வேசமாகக் கேட்டார்!
'எது நான்ஸென்ஸ்?'
இல்லை எண்பதா...?
அந்த
ஆன்மிக ஞானி
'இல்லை!' எண்று
அதே சொல்லைத்
தனது பதிலாகத் தந்தார்!
"அப்படி என்றால்
'உண்டு' என்பதா..?"