இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
59 ————————||||
உப்புமண்டித் தெரு
கேள்வியைக்
கொக்கியாக்கி விட்டதாக
எண்ணிக் கொண்டு
கொஞ்சம் கனைத்துக்கொண்டார்
பகுத்தறிவுப் பாசறையாளர்!
"அதுவும் இல்லை!"
அடிக்க வருவதுபோல்
ஆன்மிக தேவனின்
பதில்
ஆவேசத்தோடு வெடித்தது!
விதண்டாவாதி
எழுந்து வந்து
வேதாந்தியை
நெருங்கி நின்றார்!
சுற்றும் முற்றும்
பார்த்துக் கொண்டார்!
"எல்லோரையும் போலவே
நீங்களும் குழப்புகிறீர்கள்!"
"இல்லை! கிடையாது!
நான் குழம்பி இருந்தாலல்லவா
மற்றவர்களைக் குழப்புவேன்!"
"அப்படி என்றால்
நீங்கள்