இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வ. கோ. சண்முகம்
||||————————60
தெளிவோடுதான்
தீர்மான முடிவோடுதான்
இருக்கிறீர்களா...?"
"சந்தேகம் இல்லாமல்...!"
"சரி; ரொம்ப சரி!
ஒரே வார்த்தையில்
உறுதியாகச் சொல்லிவிடுங்கள்!
கடவுள் உண்டா...?
இல்லையா..."
விதண்டாவாதி உரத்த குரலில் கேட்டார்!
"என்னைப் பொறுத்தவரை
இறைவன் நிச்சயமாக உண்டு!
சதகோடி விகிதம்
சத்தியமாக உண்டு!
'உண்டு' என்றால்
நீ
அந்தக் கடவுளை
எங்களுக்குக் காட்டுவாயா
என்றுதானே
கேட்க வந்திருக்கிறீர்கள்...?”
"ஆமாம்!
அதற்காகத்தான்
வந்திருக்கிறோம்!"