இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வ. கோ. சண்முகம்
||||————————62
கும்பலைப் பிளந்து கொண்டு
முன்னுக்குப் பாய
ஆரம்பித்தனர்!
அப்போது தானே
ஆண்டவனை
அருகாமையில்
நன்றாகப் பார்க்கலாம்!
ஆன்மிக வித்தகர்
அதட்டும் குரலில் சொன்னார்:
சர்வேஸ்வரன்,
இந்தப்
பிரபஞ்சப்
பேரண்டங்களுக்கெல்லாம்
ஒரே ஒரு
நிரந்தர
எஜமானன் மட்டும் அல்ல!
அவனே
அனைத்து ஜீவ கோடிகளின்
அன்புச் சேவகன்!
நாணயமும்
நம்பகமும் உள்ள
காவலன்!
அதற்காக-
அதுவும் உங்களுக்காக -
நான் கூப்பிட்டால்