இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
63 ————————||||
உப்புமண்டித் தெரு
உடனே
ஒடி வரமாட்டான்...!
"அப்படி என்றால்?"
- விதண்டாவாதி
வெறுப்போடு கேட்டார்!
"நீங்கள் தான்
அவனைப் போய்ப்
பார்க்க வேண்டும்....!
- வேதாந்தி
அமைதியாகச் சொன்னார்!
"எங்கே கடற்கரையிலா...?”
- விதண்டாவாதி
ஆத்திரத்தோடும்
கிண்டலோடும் கேட்டார்!
"பளீரென்று சிரித்த
பரம நம்பி
பகுத்தறிவுச் சிங்கத்தை
ஏறிட்டுப் பார்த்து
இந்த 'கடற்கரை
மாநாட்டு புத்தி'
உங்களை விட்டுப் போகவே
போகாதா..?” என்றார்.
பகுத்தறிவுப் பெருந்தகையாளருக்குப்
பற்றிக்கொண்டு வந்தது எரிச்சல்!