இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வ.கோ. சண்முகம்
||||———————— 64
"கடற்கரைக்கு
உங்கள் கடவுள்
வரமாட்டான் என்றால்
உங்கள் விட்டு
அடுப்பங்கரையில்
அவனைக் காட்டுங்களேன்!
அதுதான் யோக்கியனுக்கு
ஒழுங்கு...!"
கூட்டத்தில் முக்கால் பகுதி
ஒட்டு மொத்தமாகச்
“சரியான சம்மட்டி!"
என்று
குரல் கொடுத்தது!
ஆன்மிகவாதியும்
"அப்படியே காட்டுகிறேன்..!
ஆனால், ஒரு சின்ன நிபந்தனை...!"
என்றார் தயங்காமல்!
"ஒத்துக் கொண்டு விட்டு
அப்புறம் என்ன நிபந்தனை...?
முணுமுணுத்தார்
அறிவுப் பாசறை அண்ணல்!
கூட்டத்திலும் கசமுசா!
"பேஜாரு புடிச்ச ஆளு!
டக்கு வச்சுப் பேசி