இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
65 ————————||||
உப்புமண்டித் தெரு
டபாய்க்கப் பாக்கிறான்!
உட்டுடாதிங்க, வாத்தியாரே!'
-இப்படி ஒரு...!
நைனாக்குரல்'
நிமிடங்கள் சில
நகர்ந்த பிறகு -
ஆன்மிக ஞானி
கூட்டத்தை நோக்கி
ஆணையிடுவது போல
அதிகாரக் குரலில் சொன்னார்
“உங்களில்
‘கடவுள் உண்டு!” என்று
உறுதியாக
உண்மையாக
நம்புபவர்கள் எல்லோரும்
தயவு செய்து
உடனேயே
வெளியே போய் விடுங்கள்!
உங்களில்
'கடவுள் இல்லை!' என்று
உறுதியாக -
இறுதியாக -
உண்மையாக -
முடிந்த முடிவாக