இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
67 ————————||||
உப்புமண்டித் தெரு
பதவிசாக
எழுந்து வெளியே போனாள்!
வேடிக்கைக் கும்பலில் இருந்த
ஒரு குருக்கள்
ஒரு புரூடா ஜோசியர்
ஏதோ ஏமாற்றத்துடனர்
முணுமுணுத்தா வாறே
வெளியேறினார்!
அவர்களைத் தொடர்ந்து
பட்டை விபூதியோடு
நின்றிருந்த அறங்காவலர்
ஒருவர் வெளியேறினார்!
பாதி ஆன்மிக வாதியாகவும்
பாதி பகுத்தறிவு வாதியாகவும்
இருந்த
ஒரு இளம் விஞ்ஞானி
திடிரென்று எழுந்து
விதண்டாவாதத் தலைவருக்கும்
வேதாந்த வித்தகருக்கும்
ஏறுபோல்
எதிரே நின்றான்!
ஏன் என்றால்
இந்த