இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வ.கோ. சண்முகம்
||||———————— 68
இருட்டுப் புதிர்களின்
பூட்டுகளையெல்லாம்
தான் ஒருவனே
எறிய முடியும்-
எறிய வேண்டும்
என்று
துடித்துக் கொண்டிருந்தான் அவன்!
அந்த
இளம் விஞ்ஞானியை
முட்டித் தள்ளுவது போல்
முன்னே
பாய்ந்து வந்தான்
இன்னொரு இளைஞன்!
அவன்
ஒரு கவிஞன்!
ஜிப்பாவும்
'பைஜாமாவும்
சிவப்பேறிய விழிகளும்
'அவனைக்
கவிஞனாக'
அடையாளப் படுத்தின!
உதயத்திலிருந்து
மறுஉதயம் வரை
எப்போதும்
மது நாறும் உதடுகளால்