இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வ.கோ. சண்முகம்
||||———————— 70
“என்ன அதனால்...?
இனிமேல் பொறுக்க முடியாது!
ஏ ஏய்ப்புக்காரனே...!
நீ
எங்களுக்கு
இன்றே -
இப்போதே
'கடவுள் உண்டு' என்பதை
நிரூபித்தே ஆக வேண்டும்!
நேரிலேயே காட்டியே ஆகவேண்டும்!
இல்லாவிட்டால்
உன்னைச் சும்மா
விட மாட்டோம்...!"
இளங்கவிஞன்
ஆன்மிக வாதியை
இப்படி
'ஏக வசனத்தில்’
சாராய வார்த்தைகளால்
சரமாரியாக மிரட்ட
விதண்டாவாதத் தலைவர்
அவனது
சொல்லுக்குச் சொல்
'ஆமாம்' களைப் போட்டார்!
கூட்டமும்
"என்னைய்யா சொல்றே!”
என்று மிரட்டியது!