இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
71 ————————||||
உப்புமண்டித் தெரு
"இரண்டே இரண்டு நிமிஷங்களில்
கடவுள் உண்டு என்பதை
நிரூபித்துக் காட்டி விடுகிறேன்!
ஆனால் எல்லோருக்கும் அல்ல!
உங்களில்
ஆறே ஆறு பேர்கள் மட்டும்
என் பின்னால்
உடனே
அடுப்பங்கரைக்கு
வாருங்கள்!”
- இப்படிச் சொல்வி விட்டுத்
தனது
அடுப்பங்கரைக்குள்
நுழைந்தார்
பரமநம்பி!
இளங்கவிஞனும்
இளம் விஞ்ஞானியும்
அவரையும்
முந்திக் கொண்டு
அவரது
அடுப்பங்கரைக்குள்
ஓடினார்கள்!
அவர்களைத் தொடர
அச்சிறு கூட்டம்
முட்டி மோதியது!