இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
73 ————————||||
உப்புமண்டித் தெரு
அவரது நெடிய உடலையே
தகர்த்தது!
தணலழகனும்
பின்னால் திரும்பிப் பார்த்து
'இரணிய தாசா!
வா, எண்னோடு' என்று
ஒரு தோழரை
இழுத்துக் கொண்டு ஓடினார்!
இரணியதாசன்
தணலழகனின்
முடைசடை சந்தர்ப்பங்களின்
அந்தரங்க உதவியாளன்!
ஆக-
ஆறு பேர்கள் மட்டும் அல்ல -
எப்படியோ
எட்டு பேர்கள்
பரம நம்பியினர்
அடுப்பங்கரைக்குள்
புகுந்து விட்டனர்!
அவர்களில் ஒருவர்
உள்ளே நுழைந்ததும்
முதல் காரியமாக
அடுப்பங்கரைக்
கதவுகளைச் சாத்தி
கெட்டியாக
உள் தாழ்ப்பாளையும்
போட்டு விட்டார்!