இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வ.கோ. சண்முகம்
||||———————— 74
வெளியே
நின்ற நபர்கள்
கொதித்தனர்!
"அயோக்கியனர்கள்!”
என்று ஒருவர்
ஏமாற்றத்துடனர் கத்தினார்!
அடுக்களைக்குள்ளே-
பரபரப்புடனர்
என்ன நடக்கும் என்ற
எதிர்பார்ப்பு அரிக்க
நின்றிருந்தவர்களைப் பார்த்து
பவித்ரமான
அந்த
நுண்ணறிவு வேதாந்தி
பரம நம்பி
"என் இனிய நண்பர்களே!
இன்றே
உங்கள் அனைவரின்
வாழ்வும் புனிதமாகி விட்டது!
வெற்றி முகடுகளில்
வீரநடை போடத் துவங்கி விட்டது!
நானும்
வென்று விட்டேன்!
பூரிப்புடன்
விடை தருகிறேன்.
போய் வாருங்கள்!