இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
75 ————————||||
உப்புமண்டித் தெரு
புதுப்பிறவிகளே!
புண்ணியச் செல்வங்களே!”
போய் வாருங்கள்!
- என்று ஆனந்தக் கண்ணீர்.
அருவியாகக்
கரங்குவித்தார்!
அந்த எட்டுப் பேர்களில்
குறிப்பாக -
விதண்டாவாதத் தலைவருக்குப்
பரம நம்பியின்
இன்னுரையோ
பொன்னுரையோ
புரியவில்லை!
ஜன்னிக் கவிஞனுக்கு
இதயத்திலோ-
மூளைக்குள்ளோ-
ஏதோ ஒன்று
நெருடிற்று
அதனால்
உக்கிரமாகப் பிரிந்த
அவனது
உதடுகள் ஊமையாகி விட்டன!
இளம் விஞ்ஞானிக்கும்
மூளை யோட்டத்தில்
ஒரு மின் அதிர்ச்சி!