இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வ.கோ. சண்முகம்
||||———————— 76
புரியாத தென்று.
பொய்ம்மை என்று
புறக்கணித்து வந்ததை
அவ் விஞ்ஞானி
அக் கணத்திலிருந்து
மெல்ல
மெல்ல
உணரத் தொடங்கி விட்டான்!
அறிவு வீங்களுக்குத்தான்
ஆத்திரம் கொப்பளித்தது!
ஏய், கிழப்பயலே!
கிறுக்கு புடிச்சவனே!
எங்களை எல்லாம்
ஏமாத்தவா பாக்கிறே...?
-'இண்ஸ்ட்டண்ட்ஃபைனான்சியர்'தான்
எல்லோர் சார்பிலும்
தன் ஒற்றை
டப்பாத் தொண்டையால் கத்தினார்!
அப்போதும்
ஆத்திரமடையாத
பரமநம்பி
'இன்னுமா, புரியவில்லை உங்களுக்கு?
விளக்கமா, வேண்டும், ஐயோ!'
என்றார்!
'கிராப்பா அடிக்கப் பாக்கிறே!'