பதிப்புரை
தமிழ்க்கவிதை வரலாற்றில் புதுக்கவிதைக்கு என்று ஒரு தனித்துவமான இடம் உணடு. எழுபதுகளில் பெரும் இயக்கமாகவே கிளர்ந்தெழுந்த இந்தக் கவிதை வடிவம், கவிதை படிப்பவரையும், கவிதை படைப்பவரையும் அதிகமாக்கிற்று என்றே சொல்லலாம். அதற்குக் காரணம், மரபுக் கவிதையின் இலக்கணத்தைவிட எளிய இலக்கணம். இயல்பான வடிவம்.
மரபுக் கவிதையில் தேர்ந்த கவிஞராக விளங்கிய ‘எழுச்சிக்கவிஞர்’ வ.கோ. சண்முகம் புதுக்கவிதைகள் எழுதத் தொடங்கினார். இவருடைய புதுக்கவிதைகள் ‘தெற்கு ஜன்னலும் நானும்’ என்ற நூலாக வெளிவந்திருக்கிறது.
புதுக்கவிதையின் வடிவத்தைப் பயன்படுத்தி புதுமுயற்சி செய்யும் நோக்கில், சிறுகதைகளை புதுக்கவிதை நடையில் அவர் எழுதிய ‘புதுக்கவிதைக் கதை’களின் தொகுப்பே இந்த நால்.
சரளமான நடையில் கவிதைத்தனமாக இவர் கதை சொல்லும் பாங்கு சுவையானது. இந்த நுால் புதுக்கவிதைக் களத்தில் புதுமையானது. ஆழமானது. இந்த அற்புத கவிதைக்கதை நூலை வெளியிடுவதில் அந்தாதி பெருமகிழ்ச்சி கொள்கிறது!
அன்புடன்
பதிப்பகத்தார்