இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வ.கோ. சண்முகம்
———————— 80
அந்த மெய்ப்பொருளை
அதன்
நிலைபேறுடைய
பேருண்மையை
நீங்கள்
ஒப்புக்கொண்டு விட்டீர்கள்
என்று தானே, அர்த்தம்!
கவிஞர் கிடக்கட்டும்!
அவர்
கற்பனைக்காரர்!
பொய்களையே
மெய்யாக்கி ரஸிப்பவர்!
எப்போதும்
ஏதோ ஒரு போதையில்
கனவுகளையே
அசை போட்டுக் கொண்டிருப்பவர்!
லெளகீக அலர்ஜிகளால்
இறைமையை
எட்டிப் பார்க்க
சந்தர்ப்ப
துர்ப்பாக்கியசாலி!
ஆனால் -
இந்த