இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
85 ————————
உப்புமண்டித் தெரு
தூய்மையோடும் செய்து
அவனியை
வாழ வையுங்கள்!
அதுவே
மகத்தான
மகேஸ்வர பூஜை!
மகா வழிபாடு!
இத்துடன் முடிக்கிறேன்
இனியவர்களே!
எனது அன்பு நன்றி!
இருவரைத் தவிர
ஏனையோர் கலைந்தனர்!
இளம் விஞ்ஞானி
தெளிவோடு நின்றான்!
இளங்கவிஞன்
ஜன்னி தெளிந்த
கண்ணீரோடு நின்றான்!
“மன்னியுங்கள் அய்யா!”
என்று
பரமநம்பியின்
பாதங்களைத் தொட்டு
வணங்கினான்!