இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வ.கோ. சண்முகம்
———————— 86
அவனை
தோள் தொட்டுத் தூக்கி
“நீ ஏற்கெனவே
மன்னிக்கப்பட்டு விட்டாய் அப்பா!
விழிகளின் வழியே
பாவங்கள்தான்
வழிகின்றனவே!”
அவரை
இடைமறித்த
இளம் விஞ்ஞானி
“உங்களைத் தோற்கடிக்க
ஒடி வந்தேன் அய்யா!
தோற்றுப் போனேன் நான்!
ஆனாலும்
வெற்றியின்
வாசனையே
எனது தோல்வியில்
வழிகிறது,
வணக்கம்!
விஞ்ஞானியும்
வெளியேறினான்!
அப்போது -
அடுக்களையை விட்டு
கவிஞனும்