இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
87 —————————
உப்புமண்டித் தெரு
பரமநம்பியும்
வெளிக்கூடத்துக்கு
அப்போதுதான் –
கவிஞன்
அந்தக்கூடத்தை
அதிசயம் தழும்ப
உற்றுஉற்றுப் பார்த்தான்!
பூஜா பீடம் போன்ற
சற்று உயர்ந்த
ஒரு மேடையில்
குத்து விளக்கொன்று
கோலச்சுடர்
உமிழ்ந்தபடி
தீபமிட்டுக் கொண்டிருந்தது!
மேடையில்
சில நூல்கள்...
மேலட்டைகளில்
மனிதேஸ்வரனின்
மோகனப் புன்னகை
முகிழ்த்துக் கொண்டிருந்தது!
மேடைக்கு மேலே
சுவரில் மூன்றே மூன்று
படங்கள்...