பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமர்கலாம் வாழ்வும்-இலக்கியமும்

கள்ளைத் தவிர மற்றவற்றைக் காமுறாடை சிறந்தது, கொள்ளை அழகு மகளிர் கையால் கொள்ளும் மதுவே சிறந்தது, கள் மயக்கம் கட்டிலாமை கடவும் எதிர்ப்பே சிறந்தது, மண்விண் இடையில் உள்ள எவையும் மதுப்போல சிறந்ததில்லையே.

புதிய ஆட்சிச் சிறப்பின், மேலாம் பழைய மதுவே சிறந்தது, மதுவைத் தவிர மற்றவற்றின் வழியில் செலாமை சிறந்தது, பதிற்றுப்பத்துத் தவிசின்மேலாம் கடைசி மதுவின் ஒருதுளி. மதுக் குடத்தின் மூடி மன்னர் மணிப்பொன்முடியிற் சிறந்தது. 225

உனது வாழ்வின் தேவைக்கான உலகின் அரிய பொருள்ளலாம் உனது விருப்பம் போலக் கொள்ள உரிமம் பெற்றாய் ஆயினும் உனதுழைப்பால் பெறாதவற்றை உரிமை கொள்ளல் பயனில்லை, உனது வாழ்வின் நாள்கள் தம்மை மாற்றிக் கொள்ளேல் விழித்திரு. குயவனிடத்தில் குடத்தை ஒன்று வாங்கினேன்நான் அக்குடம், “வியக்கும் வேந்தன் அவன்கை ஏந்தும் மதுவின் பொன்னின் கிண்ணமாய்ப் பயன்பட்டிருந்தேன் இன்றோ எந்தக் குடியனுக்கும் பாண்டமாய் இயங்குகின்றேன்" என்றனைத்துச் சேதிமுற்றும் சொன்னது.

103 த. கோவேந்தன்