பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமர்கயாம் வாழ்வும் இலக்கியமும்

நண்பனே, நான் உரைக்கும் உண்மை நல்ல முறையில் கேட்டிடு, வெண்பொன் மேனி மகளிரோடு சிவந்த மதுவைக் கொண்டிரு, மண்ணகத்தைப் படைத்தோனுக்கு நம் மீதில் ஏது அக்கறை? உன்னை என்னை மீசை தாடி தனினும் உயர்வாய்க் கொண்டிலான்.

நம்பிக்கையின் கிளையில் கனிகள், தம்மைக் காண வேண்டிநான் அங்கே என்றன் வாழ்க்கைக் கயிற்றின் அறுதி இருப்பது அறிகுவேன் தன்னை மறந்த நிலையின் வாயில் தனைக்கண்டிருப்பின் போதுமே. இன்னும் பலநாள் வாழ்வுக்கடலின் இடுக்கில் சிக்கி இருப்பதோ?

அன்பணங்கே, குடம் எடுத்து மதுவின் கிண்ணம் நிரப்பிடு, இன்ப ஒடைக்கருகில் பசும்புல் வெளியில் என்னோடு அமர்ந்திடு, ஒன்றுக்குதவாக் கொடிய காலச் சகடம் அன்பின் உளங்களைக் கொன்றழித்து நூறு முறையும் குடங்கள் கலங்கள் ஆக்கிடும். 230 நான்கு பூதம் ஐம்புலன்கள் பற்றிப் பலகால் நவின்றும் என்? தோன்றும் புதிர்கள் ஒன்றாய் நூறாய்க் கோடியாக இருப்பின் என்? ஆன்ற நாமே வெறுந் துகள்கள்; அமிழ்த யாழை மீட்டிடு, ஏன்ற வளிநாம் எலுவ சிறுவ, இனிய மதுவைக் கொண்டு வா!

! 04 த. கோவேந்தன்