பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2-toir*stuirú_ormyōsutū_&ïsoŝ·ŝlw6ptö

எந்தப் பக்கம் நோக்கினாலும் இன்ப உலகின் ஆறுதான்் சிந்து பாடித் தோட்டம் பாயும், தென்படும் இப் புல்வெளி அந்தத் துறக்கம் போலதாகும், அவற்றை இங்குப் புகழ்ந்திடேல், வந்து குந்து வான் அணங்கார் வனப்பு முகத்து மகளிர்பால். உன்றன் ஆர்வம் நேற்றைப் போதில் உனது நிறைவோடு ஒய்வுகொள், உன்றன் இச்சை அனைத்தும் நேற்றே உளத்தில் ஊன்றப் பட்டன. எங்கனம் நான் உனக்குரைப்பேன்? உன்னை வினவி டாமலே உன்றன் நாளை நேற்றைப் போதே முடிவு செய்யப் பட்டதே.

வாய்ப்புனக்கு வெள்ளை அப்பம், இரண்டு மிடா நிறைமது, தோய்த்துத் தின்னத் தொடையின் கறியும் தோதாய் உனக்குத் தந்திடில் வாய்த்த காவில் மலர்முகத்து மங்கையோடும் மகிழ்வையேல் தோய்ந்திருக்கும் உன்னை விஞ்சி எந்த மன்னன் நுகருவான்? விண்ணகத்தின் செயல்கள் யாவும் முறையாய் நிறுக்கப்பட்டிடின் மண்ணகத்தில் அனைத்து நிலையும் ஏற்கும் வகையில் மாறிடும், அண்ணணித்துக் கோள்கள் நிலையில் அறம் இருக்குமாயிடில் மண்ணில் மாந்தர் மனத்தின் நீர்மை மாறி நிற்றல் எப்படி? 235