பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

‘அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சாகும்’ என்பது பழமொழி. இப் பழமொழி மாந்த வாழ்வில் எதிலும் எதற்கும் பொருந்தும்.

தமிழகத்தில் பாரதி, பாரதிதாசன் இருவரும் மது அருந்துபவர்கள்தாம். ஆனால் சான்றோர்களால் எண்ணப்படாதவராக இல்லர்மல் உயர்ந்திருந்தனர். மேலை நாட்டில் பேக்கன் முதல் பெர்ட்ராண்ட் ரசல் வரை மதுப்பழக்கம் இருந்தாலும் மட்டு மீறியவர்கள் அல்லர். மாறுபாடில்லாத உண்டியோடு ஊறு பாடற்று வாழ்ந்தனர்.

கள்ளினை. மதுவினை - பல இடங்களிலுல் உயர்த்தப் பாடியுள்ளான் பாரதி. காரணம் அளவோடருந்திய கள் கருத்தூற்றைப் பாட்டருவியாய் வெளிப்பட உந்தாற்றலாயிற்று.

உச்சிதனை முகர்ந்தால் -

உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி.

புல்லாங்குழல் கொண்டு வருவான் - அமுது
பொங்கித் ததும்பி நற்கீதம் படிப்பான்
கள்ளால் மயங்குவது போலே - அதைக்

கண்மூடி வாய்திறந்தே கேட்டிருப்போம் - என்றும்

தேர்ந்தே கனிகள் கொண்டுவருவேன் நல்ல
தேங்கள் கொண்டினிது களிப்போம் –என்றும்

பானமடி நீ எனக்கு, பாண்டமடி நானுனக்கு -

ஆசை மதுவே கனியே அள்ளுசுவையே -