பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மது நமக்கு மதுநமக்கு
மதுநமக்கு விண்ணெலாம்
மதுரமிக்க அரிநமக்கு
மதுவெனக் கதித்தலால்
மது நமக்கு மதியுநாளும்
மது நமக்கு வானமீன்
மது நமக்கு மண்னு நீரும்
மது நமக்கு மலையெலாம்
மது நமக்கோர் தோல்வி வெற்றி
மது நமக்கு வினையெலாம்
மது நடிக்கு மாதர் இன்பம்
மது நமக்கு மதுவகை,
மது நமக்கு மது நமக்கு
மது மனத் தொடாவியும்
மதுரமிக்க சிவநமக்கு
மதுவெனக் களித்ததால்

- இப்படிப்பாடிச் செல்கின்றார் பாரதியார் விரிக்கின் பெருகும். சுருக்கின் எஞ்சும். மு. கருணாநிதியால் எப்படி தமிழகத்தில் மதுக்குடிப் பழக்கம் பெருகித் தமிழர்களைச் சாகடிக்கின்றதோ அதைப்போல மட்டுமீறிய குடிப்பழக்கத்தைத் தங்கட்கு அடிமையாய் இருப்பதற்கு ஆரியர்கள் சோமபாணம் என்றும் சுராபானம் என்றும் நல்லவர்களை - வல்லவர்களைத் திசை திருப்பி விட்டார்கள். தேன் அளவோடு உண்டால் எப்படி நன்மை பயக்குமோ அப்படியே மதுவும் (கள் - நறவு) நன்மை பயப்பதே.