பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒழுங்கு என்பவையே. இவற்றைக் கண்டுகொண்டவர்கள்தாம் சங்கச் சான்றோர்கள். அவர்களோடு ஒப்பு நோக்கினால் உமர்கயாமைப் புரிந்து கொள்ளலாம்.

தான் என்பதும் நான் என்பதும் இல்லாமல் வாழ்வதே இன்பம் பொலிவு. அதுவே காதல், அதுவே இசை. அதுவே மது. தன் முனைப்பு இல்லாமல் வாழ்வது அதுவே மெய்யான வாழ்வு. இந்த வாழ்வையே நாம் “பாட்டு வாழ்க்கை” என்கிறோம்; இயற்கையோடு கைகோர்த்து கலந்தின்புறும் வாழ்க்கை இது.

அன்பை விட்டுவிட்டு உடன்பர்டு செய்து கொண்டு வாழ்வது வாழ்வதைவிட இழிவானது. உண்மையான வாழ்வை வாழ்வது ஒருகண நேரமேயானாலும் கூட பொய்யில் நிலைத்து வாழ்வதை விட மிக மிக மேன்மையானது. பொய்யில் வாழ்வதைவிட மெய்மைக்காக இழப்பது மிகவும் மதிப்பும் சிறப்பும் மிக்கது.

வாழ்வின்பம் உழைப்பில் செழிப்பது அன்புறவில் கொழிப்பது ஈவதில் இறும்பூது எய்துவது, அது அழகியல் ஆழியில் ஆழ்ந்து திளைப்பது. அப்படிக் கலை இலக்கிய அழகியல் நுகர்வாக மாற்றப் பெரிதும் ஒன்றும் தேவையில்லை. வெறும் அழகான உணர்வு நிலையே தேவை. ஒரு நுண்ணுணர்வுள்ள உள்ளுயிர். அதிக உணர்வு கொண்டால், அதிக உள்ளொளி கொண்டவராவோம். ‘யாதும் ஊரே யாவரும் கேளிரென வாழ்வோம்’

ஆண் பெண் ஒருமையில் இருக்கும் துணிவை அன்பின் நுண்ணறிவு தருகின்றது. மேலும் படைப்புத் தன்மையையும்.