பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“பின்பு வருஷங்கள் பல ஓடின. அம் மூவரில் ஒருவனாகிய நிஜாம் உல்க் - முலக் என்பவன், தன் நாட்டிலிருந்து வெளியேறி, கஜினியிலும், காபூலிலும் பிராயணம் செய்தான். அங்கிருந்து திரும்புகையில் சுல்தான் ஆல்ப் அர்ஸ்லன் என்ற அரசனின் அரசாங்கக் காரியாலத்தில் அவனுக்குப் பெரிய பதவி அளிக்கப்பட்டு, நாளடைவில் அவன் சுல்தானுக்கு மந்திரியானான்.

“சில வருஷங்கள் கழித்து அவனுடைய இரண்டு, பள்ளித் தோழர்களும், பழைய ஒப்பந்தப்படி, அவனுடைய அதிர்ஷ்டத்தில் பங்கு கேட்க வந்தனர். அவர்களில் ஒருவர் உமர்கயாம் மற்றவன் ஹஸன் - இல் - ஸபாஹ் என்பவன்.

“ஹலன் அரசாங்கத்தில் தனக்கு முக்கியமான ஸ்தானம் வேண்டுமென்று கோரினான். மந்திரியின் வேண்டுகோளுக்கு இணங்கி சுல்தான் அவனை ஒரு பெரிய அதிகாரியாக்கினான். நாளடைவில் ஹஸன் தனக்குப் பேருதவி செய்த மந்திரியிடமே பொறாமைகொண்டு, அவனைப் பகைத்து வந்தான். மந்திரிக்குத் தீங்கிழைக்க வேண்டும் என்று செய்த முயற்சியில் ஹஸன் தோல்வியுற்று, அதிகாரத்தை இழந்து, ஊரூராக அலைந்து திரிந்தான். பிறகு அவன் இஸ்மேலியர்கள் என்ற பாரசீக ஜாதியார்களுக்குத் தலைவனாகி, மகம்மதிய உலகத்தையே ஒரு கலக்குக் கலக்கி வந்தான். கடைசியில் அவனுக்கு உபகாரம் செய்த நிஜாம் உல் - முல்கே அவன் கத்திக்கு இரையாகி முடிந்தான் என்றால் அவனுடைய தீக்குணத்திற்கு எல்லை ஏது?

“உமர்கயாமும் மந்திரியாகிய தம் பள்ளித் தோழன் நிஜாமிடம் தம் பங்கைக் கேட்க வந்தார். ஆனால் அவர்