பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர்நால்ட் ஆங்கிலத்தில் பிரசித்தப்படுத்தியது போல், பாரசீக இலக்கியத்தை பிட்ஜெரால்ட் பிரபலப்படுத்தினார். அவருடைய இங்கிலீஷ் ‘ருபயாத்’ எல்லையற்ற புகழ் பெற்று விளங்குகிறது.

“உமர்கயாம் எழுதிய ‘ருபயாத்’ 800 வருஷங்களுக்குப் பிறகு இப்பொழுதுதான் தமிழில் முதல் முறையாக முழுதும் வெளிவருகிறது.

“கி.பி. 1389 வரை வாழ்ந்திருந்ததாகத் தெரிகிறது. அவரே பின்னால் அநேகம் கவிஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கினார். ‘ருபாயத்’ பாடிய உமர் கயாம் அவர்களுடைய வரலாறு அடுத்தாற்போல் தனியாக எழுதப் பெற்றிருக்கிறது. ஆங்கிலத்தில் ‘ருபாயத்’ பற்பல தினுசாக, பற்பல விலைகளில், கண்ணைக் கவரும் முறையில் பதிக்கப் பெற்றிருக்கிறது. இதிலிருந்தே ஆங்கிலம் கற்றவர்கள் அதை எவ்வளவு பாராட்டுகிறார்கள் என்பது புலனாகும்.” ப. ராமசாமி

பன்னிரண்டாம் நூற்றாண்டில் உமர்கயாம் அறிஞருக்கும் முன்னும் பின்னும் சமகாலத்தும் வாழ்ந்த அபீசு, அத்தர் போன்றோர் அன்பு, காதல், வாழ்க்கை மது, இயற்கை என உண்மைப் பொருளைப் பாடல்களில் வாழ்க்கையை,உலக இயல்பை, நோக்கையும் போக்கையும் அறியாமல் அவற்றைப் புரிந்து கொள்ள முடியாது என்றும் உண்மையான பயனுள்ள எண்ணமே கூட வாழ்க்கையை அறிந்து கொள்வதன் விளைவாகத்தான் அமைகிறது என்றும் தம் பட்டறிவை பாட்டிலக்கியத்தில் படைத்தனர்.