பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதலி நீ பாட்டிசைத்துக்
கனிவோடு கூடுவையேல்
ஏதும் இனிக்கவலை இல்லை

இதுவன்றேர் பரமபதம்

- என ஆங்கில மூலத்தோடொன்றியும் ஒன்றாமலும் சென்றாலும் ஆங்கிலத்தின் கருத்துற்று நெருங்கியுள்ளது. இப் பாடலையே அண்மையில், மாப்பெரும்புலவர் உ.வே.சா. போல் உமர்கயாமைத் தேடிய அவரிடம் அவர் நண்பரும் பாரசீக மூலத்திற்கு மிக நெருக்கமான மாறுபடாத ஆங்கிலத்தில் செய்த பாடல் இது

I need a jug of wine, and a book of poetry
Half loaf fora bite to eat,
Then you and I seated in a deserted spot,
Will have more wealth than a Sulthan's realm.

என் தமிழாக்கம் இது:

கிண்ண நிறைய மதுவும் செஞ்சோல்
கிளர்த்தும் பாடல் நூலுடன்
உண்ணும் சுவைசேர் மதுவும் போதும்
உனக்குநான், எனக்கு நீ
பண்ணிசைக்கும் இன்பம் நம்முள்
பாலை நிலத்தில் வாழினும்
மண்ணும் மன்னர்செல்வ வாழ்வின்
மேலதாகும் நம்வாழ்க்கையே!