வாணாள் முற்றும் கிழத்தியோடு மகிழ்ந்து கிடந்த போதினும்
வாணாள் முற்றும் உலக இன்பம் மண்டிச் சுவைத்த போதினும்
வாணாள் முற்றும் கண்ட சுவைகள் சாவில் வந்து முடியுமே
வாணாள் முற்றும் கண்ட கனவு அதுவும் கனவாய்ப் போனதே.
20
மகிழ்ச்சி கெட்டு மகிழ்ச்சியாம் சொல் மட்டும் எஞ்சும் வேளையில்
கலக்கும் முரட்டு, மதுவையன்றிக் காணும் தோழர் யாரடா?
பிடிப்பிறுக மதுக்கிண்ணத்தைப் பிடி மகிழ்ச்சிக் கைகளில்,
பிடிப்பதற்கு வேறேதுண்டு, பீழை மிக்க வாழ்விலே?
பன்னூறாண்டுக் காலமாகத் தொடரும் பயணம் முடிகையில்
சின்னேரம்மே.இளைப்பில் துயிலும் வாய்ப்புக் கிட்டும் போதினில்
என்னே நமது நெஞ்சம் என்னும் இழிந்த மண்ணின் மேட்டினில்
என்னே மீண்டும் நம்பிக்கையின் பசுமை தோன்றி. முளைவிடும்!
பிறப்பிறப்பு வாயிலூடு மாந்தன் பெறுவது அனைத்துமே
வருத்தமுற்ற உள்ளமும் வாழ்வின் முடிவுமாகுமே!
இமைப்பொழுதும் வாழ்கிலா ஒருவன். மகிழ்ச்சி சேர்க்கிறான்
பிறப்பெடுத்து வாழ்ந்திடாதான் பேரமைதி கொள்கிறான்.