பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமர்கலாம் வாழ்வும் இலக்கியமும்

இனிய காலைப் போதில் காற்றுச் சிவந்த மலரைச் சிதைத்தல் பார், கனியக் கனிய அல்லிசைப்புள் கண்டுவந்து பாடக்கேள், தனிமையாகச் செம்மலர்கள் வனத்து நீழல் தங்கிடு, மண்ணில் மலர்ந்து மண்ணில் மறையும் மலர்கள் கூட்டம் எத்தனை? 60

விம்மி முகில்கள் பசும்புல் வெளியில் மழையின் விழிநீர் கொட்டின, செம்மையான மலர் நிகர்த்த மதுவிலாது வாழ்விலை, இன்பமான இப் பசும்புல் நிலத்தில் இன்று களிக்கிறோம் இன்பமாக நாளை எவர்க்கு மாறுமோ எம் கல்லறை.

புதிய ஆண்டின் முகில் துளிகள் பூக்கும் மலரை நனைக்குமுன் விழித்தெழும்பு, மதுவின் கிண்ணம் கையில் ஏந்திக் களித்திடு, மதுகை ஈந்து மகிழ்வளிக்கும் பசுமையான புல்வெளி மறுநாள் உன்றன் உடல் புதைத்த மண்ணில் புதுமை கொண்டிடும்.

ஒடை மருங்கில் ஒங்கி வளரும் உயிர்ப்பு மிக்க பூங்கொடி பாடமைந்த வான்அணங்கள் பவழுவாயில் படர்ந்ததே, ஒடி முரட்டுத் தனமாய் அவற்றை உன்றன் காலால் மிதித்திடேல் கூடிக் கொஞ்சும் மண்ணிருந்து செழித்துக் கொழித்த மலர்களாம்.

5] த. கோவேந்தன்